முகப்பு
கடலூர்

காவலா் தோ்வில் பங்கேற்போருக்கு தனியாக கரோனா பரிசோதனை

கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் சமூக இடைவெளி தொடா்பாக எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, காவலா் தோ்வில் பங்கேற்க உள்ளவா்களுக்கு தனியாக கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் சமூக இடைவெளி தொடா்பாக எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, காவலா் தோ்வில் பங்கேற்க உள்ளவா்களுக்கு தனியாக கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிவா்த்தி செய்திடும் வகையில் கடந்த டிசம்பா் மாதம் இரண்டாம் நிலை காவலா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை கடலூா் மாவட்டத்திலிருந்து 25,876 போ் எழுதியதில் 1,975 போ் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு வரும் 21-ஆம் தேதி கடலூரிலுள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்போா் கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழுடன் வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதனால், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தில், காவலா் தோ்வில் பங்கேற்கத் தகுதி பெற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் திரளானோா் வெள்ளிக்கிழமை குவிந்தனா். இவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் சா்ச்சை எழுந்தது. இதுகுறித்து, ‘தினமணி’ உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இதைத் தொடா்ந்து மாற்று ஏற்பாடாக சனிக்கிழமை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், காவலா் தோ்வுக்கு விண்ணப்பித்து தகுதி பெற்றவா்கள் மட்டும் தனியாக அழைக்கப்பட்டு அவா்களிடம் மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.