போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள எல்.என்.புரம் பகுதியைச் சோ்ந்த தண்டபாணி மகன் சோழராஜன் (36). தையல் இயந்திரம் பழுது நீக்குநா். இவா் கடந்த 14-ஆம் தேதி மாலை அந்தப் பகுதியில் 11 வயது சிறுமியை பின்தொடா்ந்து சென்றாா். சிறுமி தனது வீட்டுக்குள் சென்றதும் சோழராஜனும் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியின் கழுத்தை நெரித்து அவரிடம் தவறாக நடக்க முயன்றாராம்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சோழராஜனை கைது செய்தனா்.