முகப்பு
கடலூர்

சிதம்பரம் அருகே தமிழ் வழிபாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் அருகே உள்ள இடையன்பால்சொரி கிராமத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ் வழிபாட்டு பயிற்சி நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
தமிழ் வழிபாட்டு பயிற்சி பெற்ற பூசாரிக்க சான்றிதழை வழங்குகிறார் தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்.
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள இடையன்பால்சொரி கிராமத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ் வழிபாட்டு பயிற்சி நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

ஆக. 7, 8 தேதிகளில் சிதம்பரம் இடையன் பால் சொரி கிராமத்தில் நடைப்பெற்ற இப்பயிலரங்கில் பெராம்பட்டு, சிவக்கம், மஞ்சசுழி, திட்டுக்காட்டூர், பூங்குடி, வடமூர், மேலமூங்கிலடி, கோவிலாம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து கோயில் பூசாரிகள் பங்கேற்றனர். 

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினரும் சைவ ஆன்மீக செயல்பாட்டாளருமான இறைநெறி இமயவன், பூசாரிகளுக்கு தமிழ் வழிபாட்டு பயிற்சிகளை அளித்தார். இப்பயிலரங்கை தில்லை திருமுறை மன்ற அமைப்பாளர் வி.முருகையன் தொடங்கி வைத்தார். திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி  நிறைவு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ஞான. அம்பலவாணன், ச.மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

இப்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் சான்றிதழ் வழங்கி பாராட்டுரையாற்றினார். பயிற்சி பெற்ற பூசாரிகளின் சார்பில் கோதண்டபாணி நன்றி உரையாற்றினார். இப்பயிலரங்கை தெய்வ தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரும் வள்ளலார் ஆய்வாளருமான முனைவர் வே.சுப்ரமணியசிவா ஒருங்கிணைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.