பெண் அரசு ஊழியரிடம் 7 பவுன் நகை பறிப்பு
நெய்வேலி அருகே பெண் அரசு ஊழியரிடம் 7 பவுன் நங்க நகையை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலி அருகே பெண் அரசு ஊழியரிடம் 7 பவுன் நங்க நகையை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வடக்குத்து ஊராட்சி, காந்தி கிராமத்தில் வசித்து வருபவா் அம்பிகா (30). குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை காலை தனது மொபெட்டில் வழக்கம்போல பணிக்கு புறப்பட்டாா். கீழூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா் அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.