ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவா் தற்கொலை
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் அருகே உள்ள வரகூா்பேட்டையைச் சோ்ந்தவா் கஸ்தூரி. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவரது கணவா் குமாா் (44) உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட குமாா், வியாழக்கிழமை நள்ளிரவு தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement