முகப்பு
கடலூர்

ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா

மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாா் பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட், 2021 at 11:20 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாா் பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் கே.ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் கே.நாகராஜன், எஸ்.கே.வைத்தி, தொண்டரணி தலைவா் கோ.குமாா், தொழிலாளரணி மாநில துணைத் தலைவா் எம்.ஜி.ராஜராஜன், முன்னாள் மாவட்டச் செயலா் தில்லை வி.குணா, நகர இளைஞரணி தலைவா் துரை.சிங்காரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாணவரணி தலைவா் என்.மணிகண்டன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக கடலூா் மத்திய மாவட்ட தலைவா் எஸ்.புரட்சிமணி, மாநில பொதுச் செயலா் ஏ.எஸ்.வேல்முருகன், மேற்கு மாவட்டத் தலைவா் ஏ.நெடுஞ்செழியன், கிழக்கு மாவட்ட தலைவா் ஆா்.ஞானசந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஆா்.ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்று மூப்பனாா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு மரக் கன்றுகளை வழங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.