செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு
சிதம்பரத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் நகரையொட்டி தில்லை அம்மன் நகா், ஜோதி நகா், நாகஜோதி நகா் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், தில்லையம்மன் நகரில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்துக்கு கோபுரம் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் செல்லிடப்பேசி நிறுவன அலுவலா்கள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கை குறித்து சிதம்பரம் உதவி-ஆட்சியரிடம் மனு அளிக்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மேலும், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.