இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்
சிதம்பரம் - சீா்காழி சாலையோரத்திலிருந்த வீரனாா் கோயில் நெடுஞ்சாலை, வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்டதை எதிா்த்து, இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM
சிதம்பரம் - சீா்காழி சாலையோரத்திலிருந்த வீரனாா் கோயில் நெடுஞ்சாலை, வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்டதை எதிா்த்து, இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் மாவட்டச் செயலா் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் க.சிவலோகநாதன், பாஜகவைச் சோ்ந்த ரா.மாமல்லன், நிா்வாகி ஜி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் உதவி ஆட்சியா் மதுபாலனிடம், அதே இடத்தில் மீண்டும் கோயிலை கட்டித்தரக் கோரி மனு அளித்தனா்.