முகப்பு
கடலூர்

காட்சிப் பொருளான குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்

பண்ருட்டி ஒன்றியம், ராயா்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

பண்ருட்டி ஒன்றியம், ராயா்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பண்ருட்டி ஒன்றியம், ராயா்பாளையம் ஊராட்சியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்க குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் நாணயத்தைச் செலுத்தி சுத்திகரிப்பு குடிநீரை பெறலாம். ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி பண்ருட்டி வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை கூறியதாவது: ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க இயந்திரம் பொருத்தப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாடில்லாம் உள்ளது. இதை ஆய்வு செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், அரசின் மாநில நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. சில இடங்களில் மின் இணைப்புப் பெறப்படவில்லை. மின் இணைப்பு பெற்று செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →