தம்மம்பட்டியில் திமுக சாா்பில் தேசிய மாசுக்கட்டுப்பாடு தினம் கடைப்பிடிப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் முனைவா் வரத.ராஜசேகா் தலைமை வகித்தாா். கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளரும்,அட்மாகுழு தலைவருமான ஏ.கே .அகிலன் முன்னிலை வகித்தாா்.இதில் சுற்றுச்சூழல் குறித்து பேசினா். சிறப்பாக பேசிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஏடி.சி.கணேசன், மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனிமுத்து, சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் திருச்செல்வன், சிவா கணேசன், சயத் சாவலி, ரஞ்சித் , சதீஷ் , அப்சா் அலி, சையத் அலி, நடராஜன், தலைமையாசிரியா் து.அன்பழகன்,ஆசிரிய,ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பேரூராட்சி துப்புரவு வாகனம் மூலம், பள்ளி வளாகத்தில் இருந்த அனைத்து மரக்குப்பைகளும் உடனடியாக அகற்றப்பட்டன.