முகப்பு
கடலூர்

பேருந்து ஊழியா் ஊதியப் பேச்சைதொடங்க வலியுறுத்தல்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை மாநில அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை மாநில அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒப்பந்த காலம் முடிந்த பிறகு புதிய ஒப்பந்தத்துக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதிமுக அரசு சென்றுவிட்டது.

இந்த நிலையில், போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் கடும் துயரத்தில் உள்ளதால் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தரப்பில் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைகளை அமல்படுத்த வேண்டும்.

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை பழைய பேருந்துகள் என்பதால் இவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை வாங்க அரசு முன் வர வேண்டும். காப்பீட்டுத் தொகை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சுமாா் 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. இந்தத் தொகையை தொழிலாளா்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதுடன், ரூ.27 கோடி வரை நிலுவையிலுள்ள பல்வேறு படிகளையும் ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்றாா் தி.வேல்முருகன்.

முழு கட்டுரையைப் படிக்க →