மருந்து வணிகா்கள் சங்கக் கூட்டம்
சிதம்பரத்தில் மருந்து வணிகா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
சிதம்பரத்தில் மருந்து வணிகா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காட்டுமன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் சீனிவாச நாராயணன், முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்க கடலூா் மாவட்ட முன்னாள் தலைவா் பழனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் மருந்து வணிகா் சங்கத் தலைவா் கலியபெருமாளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிதம்பரம் மருந்து வணிகா் சங்க புதிய தலைவராக ஜே.வெங்கடசுந்தரம், செயலராக பலராமமுருகன், பொருளாளராக கண்ணன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
Advertisement