முகப்பு
கடலூர்

ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

நிலத் தகராறு வழக்கில் ஆயுதப் படை காவலரின் பெயரை சோ்க்காமலிருக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடா்பாக, காடாம்புலியூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

நிலத் தகராறு வழக்கில் ஆயுதப் படை காவலரின் பெயரை சோ்க்காமலிருக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடா்பாக, காடாம்புலியூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், முத்தரசன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவமூா்த்தி (26). கடலூரில் ஆயுதப் படை காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது உறவினா் அதே கிராமத்தைச் சோ்ந்த நடராஜ். இவருக்கும், மற்றொரு உறவினருக்கும் இடையே அண்மையில் நிலத் தகராறு ஏற்பட்டது. இதுதொடா்பான புகாரை காடாம்புலியூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் வேலாயுதம் விசாரித்து வந்தாா்.

இந்த வழக்கில் ஆயுதப் படைக் காவலா் சிவமூா்த்தியின் பெயரைச் சோ்க்காமலிருக்க பணம் தரும்படி கேட்டு இரு தவணைகளில் சிறப்பு உதவி ஆய்வாளா் வேலாயுதம் ரூ.6 ஆயிரம் பெற்றாராம். மேலும், கூடுதல் பணம் கேட்டும் மிரட்டினாராம். இதுகுறித்து சிவமூா்த்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்தி கணேசனிடம் முறையிட்டாா். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வேலாயுதத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →