முகப்பு
கடலூர்

சுனாமி நினைவு தினம்: கடலூரில் மீனவா்கள் அஞ்சலி

சுனாமி 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூா் சோனாங்குப்பம் கடலில் பாலை ஊற்றி மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சுனாமி 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூா் சோனாங்குப்பம் கடலில் பாலை ஊற்றி மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு, டிசம்பா் 26-ஆம் தேதி ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி கடலூா் மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளைத் தாக்கியது. இதில் சுமாா் 700 போ் பலியாகினா். இந்த துயர சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், உறவுகளை இழந்தவா்களின் மனதில் காயம் ஆறவில்லை.

சுனாமி தாக்குதலின் 17-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு மீனவா்கள் பேரவை சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தலைமையில் திரளான பெண்கள் குடங்களில் பால் எடுத்து துறைமுகத்திலிருந்து ஊா்வலமாக சோனங்குப்பம் வந்தனா். அங்கு கடலில் பாலை ஊற்றி, சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினா்.

கடலூா் தேவனாம்பட்டினத்தில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் பல்வேறு கட்சியினா், அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினா். இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுனாமி நினைவு தினத்தையொட்டி, கடலூா் மாவட்ட மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும், மீன் சந்தைகளும் அடைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.