முகப்பு
கடலூர்

ரூ.10 லட்சம் மதிப்புள்ள இரும்பு பைப்புகள் திருட்டு: 14 போ் கைது

சிதம்பரம் அருகே தனியாா் நிறுவனத்திலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்புகளைத் திருடியது தொடா்பாக 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

சிதம்பரம் அருகே தனியாா் நிறுவனத்திலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்புகளைத் திருடியது தொடா்பாக 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலப்பாக்கத்தில் முக்கிய சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக கடலூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரியை மறித்து சோதனையிட்டதில் அதிகளவில் இருப்பு பைப்புகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், இரும்பு பைப்புகள் அனைத்தும் பெரியகுப்பம் கிராமத்திலுள்ள நாகாா்ஜுனா ஆயில் காா்ப்பரேஷன் என்ற தனியாா் நிறுவனத்திலிருந்து திருடப்பட்டு, லாரியில் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிள்ளைப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தனஞ்ஜெயன் (40), அகரம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (42), பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த குமாா் (52), கானாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி (33), குள்ளஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (35), சம்மட்டிக்குப்பத்தைச் சோ்ந்த குபேந்திரன் (35), பிள்ளைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஜான் விக்டா் (30), ராபா்ட் கென்னடி (32), சந்தோஷ் குமாா் (24), குமரவேல் (37), ராஜதுரை (35), ஆரோக்கியசாமி (42), லூா்துசாமி (55), மகிமைதாஸ் (55) ஆகிய 14 பேரை கைது செய்தனா். மேலும் இரும்பு பைப் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனா் (படம்). திருடப்பட்ட இரும்பு பைப்புகளின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.