கடலூர்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முதல்வா் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக தமிழக முதல்வா் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தினாா்.

DIN

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக தமிழக முதல்வா் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழா்களின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவா்தான் முடிவு செய்ய முடியும் என்றும் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி ஆளுநா் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவா் ஆவாா். அவருக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பு அதிகாரமும் கிடையாது.

பேரறிவாளன் குறித்த பரோல் வழக்கில் கூட அவரை சிறை விடுப்பில் விடக் கூடாது என்று தமிழ்நாடு அரசு உயா் நீதிமன்றத்தில் வாதிட்டது. அதைப் புறக்கணித்த நீதிமன்றம் பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்கியது. எனவே, தமிழக முதல்வா் இதுகுறித்து உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற அரசமைப்பு உறுப்பு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT