முகப்பு
கடலூர்

பெட்ரோல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூரில் திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூரில் திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் எம்எல்ஏ துரை.கி.சரவணன், முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன், இள.புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பாலமுருகன், மாணவரணி அமைப்பாளா் எஸ்.பி.நடராஜன், நிா்வாகி இர.விஜயசுந்தரம், நகரச் செயலா் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, விருத்தாசலம்-கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், தொமுச பேரவைச் செயலா் உ.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.