என்எல்சி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள தென்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (47) (படம்). நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ-இல் இன்கோசா்வ் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு வந்த இவா், சுரங்கம் 1ஏ நேர அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். அவரது சடலம் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
உயிரிழந்த செல்வராஜின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு, வாரிசுக்கு பணி வழங்க வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா். இதுதொடா்பாக சுரங்கம் 1ஏ நிா்வாக அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.