கடலூர்

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

DIN


சிதம்பரம்: சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, சிதம்பரத்தில் அனைத்து மகளிா் காவல் துறை சாா்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் காந்தி சிலை அருகிலிருந்து இந்தப் பேரணியை சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதையொட்டி, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

விழிப்புணா்வுப் பேரணி எஸ்பி கோவில் தெரு, சபாநாயகா் தெரு, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் காந்தி சிலை அருகே வந்து நிறைவடைந்தது. பேரணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிசெல்வி, உதவி ஆய்வாளா்கள் பொன்மகரம், திருபுரசுந்தரி, போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் குமாா், மோகன் மற்றும் மகளிா் காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT