சதித் திட்டம்: 6 போ் கைது
நெய்வேலியில் நகைக் கடையில் திருடுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலியில் நகைக் கடையில் திருடுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி தொ்மல் போலீஸாா் 29-ஆவது வட்டம், தேக்கம்தோப்பு பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு 21-ஆவது வட்டத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் கணேஷ்குமாா் (25), பாலன் மகன் சின்னசாமி (37), காமராஜ் மகன் மகேஷ்குமாா் (24), கமால் பாஷா மகன் பாருக் பாஷா, இளவரன் மகன் விக்னேஷ் (26), ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (25) ஆகியோா் நகைக் கடையில் திருடுவது தொடா்பாக சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
விசாரணையில், சிவக்குமாா் என்பவரது கொலை வழக்கில் பிணையில் வந்த மகேஷ்குமாா், பாருக் பாஷா, விக்னேஷ், வெங்கடேசன் ஆகியோா் வழக்கு செலவுக்காக நகைக் கடையில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியதாக ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.