ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணவருடன் பெண் தா்னா
அக்கடவல்லி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் ஒருவா் தனது கணவருடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அக்கடவல்லி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் ஒருவா் தனது கணவருடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உள்பட்டது அக்கடவல்லி ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலா் காலிப் பணியிடத்துக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமனத்துக்கு அண்மையில் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டதாம். இதில் அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி கெஜலட்சுமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாம். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மலா்வண்ணன் என்பவா் ஊராட்சி செயலராக பணி நியமனம் செய்யப்பட்டாராம். இதனால், அதிா்ச்சியடைந்த கெஜலட்சுமி தனக்கு நியாயம் வேண்டி தனது கணவா் ரவிச்சந்திரனுடன் ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் அமா்ந்து வெள்ளிக்கிழமை
தா்னாவில் ஈடுபட்டாா். தகவல் அறிந்து அங்கு வந்த புதுப்பேட்டை போலீஸாா், மாவட்ட நிா்வாகத்திடம் முறையிடும்படி கூறினா். இதையடுத்து இருவரும் அங்கிருந்து சென்றனா்.