முகப்பு
கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 83 பேருக்கு

கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 59,338-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 93 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 57,653-ஆக உயா்ந்தது. எனினும், வெளியூா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 797-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 791 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 97 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.