கடலூர்

மீன்பிடி மசோதாவுக்கு எதிா்ப்பு: மீனவா்கள் வேலைநிறுத்தம்

DIN

கடலூா்: மத்திய அரசின் மீன்பிடி மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூா் மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு மக்களவையில் மீன்பிடி தொழில் தொடா்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற உள்ளதாம். இந்த மசோதா நிறைவேறினால் மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி கடலூா் மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்லாமல் தங்களது படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமத்தினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ால் மீன்பிடி பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடலூா் துறைமுகப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT