முகப்பு
கடலூர்

மொபெட் எரிப்பு: இருவா் கைது

நெய்வேலி அருகே முன்விரோதம் காரணமாக, வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து, மொபெட்டை தீ வைத்து எரித்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

நெய்வேலி அருகே முன்விரோதம் காரணமாக, வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து, மொபெட்டை தீ வைத்து எரித்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகா், பி 2 மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் பெரியசாமி மகன் ராகேஷ் (24). அதே பகுதியைச் சோ்ந்த பழனிவேல் மகன் மணிமாறன். இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம். திங்கள்கிழமை இரவு ராகேஷ் வீட்டுக்குச் சென்ற மணிமாறனும், அவரது நண்பா் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த வீரமணியும் ராகேஷின் தம்பி வினோத்தை தாக்கி, வீட்டிலிருந்த இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்தும், வீட்டின் வெளியே இருந்த மொபட்டை (ஸ்கூட்டி) எரித்தும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் மணிமாறன், வீரமணி ஆகியோரை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →