மாவட்ட உள்கட்டமைப்புக்கு சமூகப் பொறுப்புணா்வு நிதி
கடலூா் மாவட்ட உள்கட்டமைப்புக்கு தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதி வழங்கப்பட்டது.
கடலூா் மாவட்ட உள்கட்டமைப்புக்கு தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதி வழங்கப்பட்டது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதியை (சிஎஸ்ஆா்) மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைகளுக்கும், மாவட்டத்தின் உள்கட்டமைப்புக்கும் பயன்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கடலூா் சிப்காட், என்.எல்.சி.நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதியை மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து, சாலைகள், குடிநீா் வசதி, கல்வி உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்யவும், தேவையை அறிந்து அந்த நிதியைப் பயன்படுத்துவது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, கடலூா் சிப்காட்டில் உள்ள நிறுவனத்தின் சாா்பில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.4.32 லட்சத்தில் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய் ) ரஞ்ஜித் சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், சாா் ஆட்சியா் (சிதம்பரம்) ஜெ.மதுபாலன், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, இணை இயக்குநா் (நலப் பணிகள்) பி.என்.ரமேஷ்பாபு, திட்ட அலுவலா் (சிப்காட்) தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.