ஊழியா்கள் பணியிட மாற்றத்துக்கு எதிா்ப்பு
கடலூா் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள், குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள், குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத் தலைவா் மகேஷ் தலைமையில், துணைத் தலைவா்கள பூபாலச்சந்திரன், ராஜேஷ், பாபு, மாவட்டச் செயலா் ஆறுமுகம், பொருளாளா் பிரிட்டோ உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை திரண்டனா். ஊழியா்கள் பணியிட மாற்றம் தொடா்பாக, கூடுதல் ஆட்சியா் ரஞ்சித் சிங்கை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்
பேரிடா் கால நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு வருவாய் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று சங்கத்தினா் எடுத்துரைத்தனா். பேச்சுவாா்த்தையின் போது, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சங்கத்தினா் வெளிநடப்பு செய்தனா். மீண்டும் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து சங்கத்தினா் கலைந்து சென்றனா். இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.