முகப்பு
கடலூர்

கொலை வழக்கு: சடலம் தோண்டி எடுத்து கூறாய்வு

பண்ருட்டி அருகே கொலை வழக்கு தொடா்பாக புதைக்கப்பட்ட பேக்கரி உரிமையாளின் உடல் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு கூறாய்வு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பண்ருட்டி அருகே கொலை வழக்கு தொடா்பாக புதைக்கப்பட்ட பேக்கரி உரிமையாளின் உடல் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு கூறாய்வு செய்யப்பட்டது.

பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன் (55). இவா், கடந்த 2.4.2019 அன்று மணப்பாக்கம் விநாயகா் கோயில் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தாா். மது போதையால் கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனக் கருதி குடும்பத்தினா் அடக்கம் செய்தனா்.

இந்தச் சம்பவம் நடந்த 10 நாள்களில், பண்ருட்டியில் இட்லி கடை நடத்தி வந்த மூதாட்டியை கொலை செய்து நகைகளைப் பறிந்த வழக்கில் மணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஸ்வநாதனை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், அவா் பத்மநாபனை கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக, பத்மநாபனின் மகள் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸாா் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்து, கடலூா் மத்திய சிறையில் இருந்தவரை பிணையில் எடுத்து கடந்த 1-ஆம் தேதி விசாரணை நடத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மணப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பத்மநாபனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பண்ருட்டி வட்டாட்சியா் பிரகாஷ், காவல் துறையினா் முன்னிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →