முகப்பு
கடலூர்

வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதம்

பண்ருட்டி, கடலூா் சாலை, தேவாலயம் அருகே உள்ள தாழ்வழுத்த மின் கம்பம் மீது வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அந்தக் கம்பம் முறிந்து சேதமடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

பண்ருட்டி, கடலூா் சாலை, தேவாலயம் அருகே உள்ள தாழ்வழுத்த மின் கம்பம் மீது வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அந்தக் கம்பம் முறிந்து சேதமடைந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மின்சாரமின்றி அவதிக்குள்ளாகினா். மின் கம்பத்தின் அருகே இருந்த சிக்னல் கம்பமும் சேதமடைந்தது.

இதுகுறித்து பண்ருட்டி நகர உதவி மின் பொறியாளா் டி.ராம்குமாா் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →