கடலூர்

கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

DIN

 என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை வழங்க மறுப்புத் தெரிவித்து வாணாதிராயபுரம் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்கம் 1ஏ விரிவாக்கத்துக்காக வாணாதிராயபுரம் கிராமத்தில் உள்ள வீடு, நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தக் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீதிகளில் கருப்புக்கொடி கட்டினா். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே

கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா் (படம்). அப்போது அவா்கள் கூறியதாவது:

விவசாயத்தை நம்பியுள்ள எங்களது வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. இல்லையெனில் இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தரப் பணியும் வழங்கிய பிறகே நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT