முகப்பு
கடலூர்

அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு செறிவூட்டி உருளைகள் அளிப்பு

சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பிராண வாயு செறிவூட்டி உருளைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 11 ஜூன், 2021 at 12:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பிராண வாயு செறிவூட்டி உருளைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மண்டல துணை ஆளுநா் முஹம்மது யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளா் இ.மஹபூப் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் பங்கேற்று, மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அசோக் பாஸ்கரிடம் பிராணவாயு உருளைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு, சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் மோத்திலால், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் சீனிவாசன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தோ்வு தலைவா் ஜி.சீனுவாசன், சத்திய சாயி சேவா சங்கம் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு, இந்திய ரோட்டரி கோவிட்-19 பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஒளிவண்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.