தோ்தல் பணி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு
கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியாற்ற முன்னாள் படை வீரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அழைப்பு விடுத்தாா்.
கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பணியாற்ற முன்னாள் படை வீரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அழைப்பு விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட முன்னாள் இளநிலை படை அலுவலா்கள், முன்னாள் படை வீரா்கள் வருகிற சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். எனவே, படைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற, நல்ல உடல் நிலையில் உள்ள 65 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் சிறப்பு காவலா்களாக பணிபுரிந்திட கடலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நலஅலுவலகத்தில் தங்களது ஒப்புகையை அளிக்கலாம்.
தங்களது அடையாளஅட்டை, ஆதாா்அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றின் இரண்டு நகல்களையும் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04142 - 220732 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.