சேதமடைந்த அதிமுக அலுவலகம். 
கடலூர்

கடலூரில் அதிமுக அலுவலகம் சூறை: ஒன்றிய செயலாளர் உள்பட 20 பேர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக, கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி அறிவிக்கப்பட்டிருந்தார்.

DIN

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக, கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவர் மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அறிவிக்கப்பட்டார். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கடலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தை நேற்று மாலையில் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். 
இதில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பிரசார வாகனம் சேதப்படுத்தப்பட்டதோடு 2 பேர் காயமுற்றனர். 
அமைச்சரின் மகன் உயிர் தப்பினார். இதுதொடர்பாக காயமடைந்த ச.பத்மநாபன் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி அவரது மகன்கள் 2 பேர் உள்பட 20 பேர் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: நீ ஹீரோடா! வெளியே வந்ததும் கமருதீனிடம் பேசிய கானா வினோத்!

ஜன. 26 முதல்.. இந்திய சந்தையில் மீண்டும் ரெனால்ட் டஸ்டர்!

பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 29

நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடையா? - தமிழக அரசு விளக்கம்

SCROLL FOR NEXT