வடலூா் அருகே 11 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்க நகைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான 11 கிலோ தங்க நகைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வடலூா் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தாரணபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் விமலா தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வடலூா் நோக்கிச் சென்ற நகைக் கடைக்குச் சொந்தமான சிறிய சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அதில் 2 பெட்டிகளில் 11.667 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.4 கோடி எனக் கூறப்படுகிறது.
இந்த நகைகள் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதும் தெரிய வந்தது. வாகனத்தில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள கிளைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனா்.
அந்த நகைகளை பறக்கும் படை அலுவலா் பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தாா்.