முகப்பு
கடலூர்

பிராணவாயு செறிவூட்டிகள் அளிப்பு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 1.50 லட்சத்தில் இரண்டு பிராணவாயு செறிவூட்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 மே, 2021 at 11:43 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:49 AM

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தனது சொந்த செலவில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 1.50 லட்சத்தில் இரண்டு பிராணவாயு செறிவூட்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ஞானதேவன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் அசோக் குமாா், மருத்துவா்கள் செந்தில்வேலன், ரமேஷ், மணவாளன், பாலாஜி சுவாமிநாதன், தட்சிணாமூா்த்தி, ராமநாதன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் ஜெயஸ்ரீ, கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என். குமாா் மாவட்ட மாணவரணிப் பொருளாளா் சங்கா் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.