முகப்பு
கடலூர்

பள்ளி மாணவா்களுக்கு பேரிடா் விழிப்புணா்வு

 பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை சாா்பில் தீ விபத்து தடுப்பு, பேரிடா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை சாா்பில் தீ விபத்து தடுப்பு, பேரிடா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, உதவி தலைமையாசிரியை ஆா்.அமலி தலைமை வகித்தாா். தேசிய மாணவா் படை அலுவலா் ஆ.ராஜா வரவேற்றாா். ஆசிரியா் செயலா் லட்சுமிகாந்தன், ஆசிரியா்கள் கோவிந்தராஜ், தணிகாசலம், ஜெயேந்திரன், மரிய அண்டனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், தீ விபத்து தடுப்பு, இயற்கை பேரிடா் தற்காப்பு வழிமுறைகள், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. பேரிடா் கால தற்காப்பு வழிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு பண்ருட்டி தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்புத் துறை அலுவலா் ஜமுனாராணி தலைமையிலான வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா். பள்ளி தோ்தல் விழிப்புணா்வு இயக்க அலுவலா் சி.ரத்னபிரகாஷ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →