பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக் கோரி சிதம்பரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆர்.டி.ஐ. துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம்: உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச அரசை கண்டித்தும் உடனடியாக பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆர்.டி.ஐ. துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் வடக்கு வீதி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆர்.டி.ஐ. துறை மாநில பொது செயலாளர் பி. ஸ்டீபன் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். ராஜா சம்பத் குமார் வரவேற்றார். முன்னாள் நகர துணை தலைவர்கள் ஆர்.சம்மந்தமூர்த்தி, இளங்கோவன், சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டேனியல் , ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சிவசக்தி ராஜா, ஓ.பி.சி பிரிவு தலைவர் குமரவேல், கடலூர் மாவட்ட ஆர்.டி.ஐ துறை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தில்லை ஆர். மக்கின், ஜெமினி எம்.என்.ராதா ஆகியோர் பிரியங்கா காந்தியை கைது செய்த உத்திர பிரதேச பா.ஜ.க அரசின் நடவடிக்கையை கண்டித்து பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான், கீரப்பாளையம் வட்டாரத் தலைவர் செழியன், முன்னாள் பொது செயலாளர்கள் ஆட்டோ டி.குமார், டிபட்டாபிராமன், முன்னாள் பொருளாளர் சம்பந்தம், பேன்சி எஸ் எஸ் நடராஜன், வெள்ளை (எ) பார்த்திபன், முன்னால் வட்டார தலைவர் ராஜ்குமார், ஆர்.ஜோதிமணி, ஆர்.டி.ஐ மாவட்ட நிர்வாகி ஜெயச்சந்திரன், ஆர்.டி.ஐ.துறை சிதம்பரம் நகர தலைவர் திரு.விக்னேஷ் , மாவட்ட நிர்வாகிகள் வசந்தராஜன், அரவிந்த், சையத் அபுசதாம், பாலாஜி, மணிரூபன், நகர நிர்வாகிகள் சுந்தர்ராஜன், அசோக்குமார், விக்னேஸ்வரன், நவீன்குமார், சூர்யா, ரோகித்சந்திரன், முத்துக்குமார், சந்தோஷ், லட்சுமிநாராயணன், சிவமணி, சிவபிரகாஷ் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தில்லை செல்வி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் முடிவில் முன்னாள் நகர துணைத்தலைவர் ஆர்.வி. சின்ராஜ் நன்றி கூறினார்.