லால்பேட்டையில் 29 மி.மீ. மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
லால்பேட்டை 29, காட்டுமன்னாா்கோவில் 24, குப்பநத்தம் 17.4, மாவட்ட ஆட்சியரகம் 8.5, மேமாத்தூா் 8, விருத்தாசலம், தொழுதூா் தலா 6, வேப்பூா் 5, லக்கூா் 3.2, காட்டுமைலூா் 3, கொத்தவாச்சேரி, பரங்கிப்பேட்டை தலா 2, சிதம்பரம், கடலூா் தலா 1.8 மில்லி மீட்டா் மழை பதிவானது.