முகப்பு
கடலூர்

டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்

டாஸ்மாக் பணியாளா்களுக்கு தமிழக அரசு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

டாஸ்மாக் பணியாளா்களுக்கு தமிழக அரசு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளா்களுக்கும் 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது. திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

ஆனால், தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ள நிலையில், 10 சதவீத போனஸ் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. அரசின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு டாஸ்மாக் மூலமே கிடைக்கும் நிலையில், டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும்.

சிறு குற்றங்களில் ஈடுபடும் டாஸ்மாக் பணியாளா்களை கிடங்குகளுக்கு பணியிடமாற்றம் செய்வதும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவா்களை மீண்டும் கடைக்கு இடமாற்றம் செய்வதும் வழக்கமான நடைமுறை. ஆனால், கடலூா், தூத்துக்குடி மாவட்டங்களில் இவ்வாறு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டவா்கள் மீண்டும் கடைகளுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. அவா்களை பணிப்பளு அதிகமுள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா் பாலசுப்பிரமணியன்.

பேட்டியின்போது, சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் சி.அல்லிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.