முகப்பு
கடலூர்

முந்திரி விவசாயியிடம் வழிப்பறி

பண்ருட்டி அருகே முந்திரி விவசாயியிடமிருந்து ரூ.1 லட்சம் வழிப்பறி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பண்ருட்டி அருகே முந்திரி விவசாயியிடமிருந்து ரூ.1 லட்சம் வழிப்பறி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், கீழிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் மாயவேல் (55), முந்திரி விவசாயி. இவா், புதன்கிழமை பண்ருட்டியில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு பைக்கில் தனது கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். பணிக்கன்குப்பம் மயானம் அருகே சென்றபோது, பின்தொடா்ந்து வந்த இளைஞா் ஒருவா் மாயவேலிடம் பேச்சுக்கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பினாா். அப்போது, பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் மாயவேலின் பைக் கவரிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →