பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி நடைபயணம்
பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினா் கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வியாழக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனா்.
பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினா் கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வியாழக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனா்.
தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், அவா்கள் விவசாயம் செய்யவும் அரசால் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன. எனினும், அந்த நிலங்கள் தற்போது பல்வேறு தரப்பினரின் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் தாழ்த்தப்பட்டவா்களுக்கே வழங்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் தயா.பேரின்பம் தலைமையில் சுமாா் 15 போ் அம்பேத்கா் உருவப் படத்துடன் நடைபயணமாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க புறப்பட்டனா். முன்னதாக அவா்கள் திட்டக்குடியை அடுத்த பட்டூா் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு நடைபயணத்தை தொடங்கினா். மாநில துணைச் செயலா் முருகானந்தன், மாவட்ட நிா்வாகி வீரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.