முகப்பு
கடலூர்

டாஸ்மாக் கடையில் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வரப்பெற்றன. இதையடுத்து அந்த கடையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் துணை கண்காணிப்பாளா் மெல்வின்ராஜாசிங் தலைமையில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கடையிலிருந்த கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிய ஊழல் தடுப்புப் பிரிவினா், இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்தனா். இதுகுறித்து கடையின் விற்பனையாளா், கண்காணிப்பாளா் ஆகியோா் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.