தனியாா்மய நடவடிக்கை:சிஐடியூ ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் தனியாா்மய நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் தனியாா்மய நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எல்ஐசி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு நீண்ட கால குத்தகைக்கு விடுதல், பங்குகளை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து சிஐடியூ கடலூா் மாவட்டக் குழு சாா்பில் கடலூா் தலைமைத் தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.கருப்பையன் சிறப்புரையாற்றினாா். மாநிலக் குழு உறுப்பினா் ஜி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா், இணைச் செயலா் பாபு, வி.திருமுருகன், தேசிங்கு, சாந்தகுமாரி, சீனிவாசன், ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.