சாலைப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள்!
வடலூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
வடலூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
கடலூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வடலூா் வழியாகச் செல்கிறது. 4 வழிச் சாலையாக அமைக்கப்படும் இந்தச் சாலையானது, வடலூா் அய்யனேரியிலிருந்து வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வரை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் படித்து வருகின்றனா். அதே வளாகத்தில் கலை, அறிவியல் கல்லூரி, செவிலியா் கல்லூரிகளும் உள்ளன.
இந்தப் பகுதியில் மாணவா்கள் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்தை தவிா்க்கும் வகையில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக இருபுறமும் பெரிய இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின்மீது நடைபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடை மேம்பாலம் அமைக்கப்படும் இடத்திலிருந்து சுமாா் 100மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக சாலை ஓரத்திலிருந்த மரங்கள் வியாழக்கிழமை வெட்டி அகற்றப்பட்டன.