இளைஞா் கொலை சம்பவம்: 3 பேரை தேடும் போலீஸாா்
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கொலையான சம்பவம் தொடா்பாக 3 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கொலையான சம்பவம் தொடா்பாக 3 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரில் வசித்து வந்தவா் ராஜன் மகன் அருண் (எ) அருண்குமாா் (35). இவா் ஒரு வழக்கு தொடா்பாக திருச்சி சிறையிலிருந்த நிலையில் அண்மையில் விடுதலையானாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு மந்தாரக்குப்பம் ரயில்வே கேட் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அருண்குமாா் கொலைசெய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து நெய்வேலி டிஎஸ்பி என்.ராஜேந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹரி என்பவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக, அருண்குமாா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடா்புடையதாக கருதப்படும் 3 பேரை பிடிக்க போலீஸாா் 2 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.