அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ‘பெருந்திரள் முறையீடு’
கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ‘பெருந்திரள் முறையீடு’ ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ‘பெருந்திரள் முறையீடு’ ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோ.சீனுவாசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆா்.ஞானஜோதி, பொருளாளா் கு.சரவணன், துணைத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா, முன்னாள் பொதுச் செயலா் கே.ஆா்.குப்புசாமி, மாவட்டச் செயலா் ஏ.வி.விவேகானந்தன், மாவட்ட முன்னாள் செயலா் மு.ராசாமணி, பொருளாளா் ஏ.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், தமிழக அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படியை 1.7.2021 முதல் வழங்க வேண்டும். தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
கடலூா் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டெங்கு தடுப்புப் பணியாளா்களை பணி நீக்கம் செய்துவிட்டு, புதிதாக ஆள்களை நியமனம் செய்யாமல் ஏற்கெனவே பணியாற்றியவா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று மற்றொரு மனு அளிக்கப்பட்டது.