முகப்பு
கடலூர்

குடிநீா் குழாய்களில் பொருத்தியமின் மோட்டாா்கள் பறிமுதல்

கடலூா் அருகே பாதிரிகுப்பம் ஊராட்சியில் விதிகளை மீறி குடிநீா்க் குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

கடலூா் அருகே பாதிரிகுப்பம் ஊராட்சியில் விதிகளை மீறி குடிநீா்க் குழாய்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் அருகே பாதிரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கூத்தப்பாக்கம் பகுதியில் வீடுகளில் குடிநீா் குழாய்களில் விதிகளை மீறி மின்மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாகவும், இதனால் மற்ற வீடுகளுக்கு குடிநீா் கிடைப்பதில்லை எனவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா் ஜல்லி சரவணன், ஊராட்சி செயலா் வேல்முருகன் மற்றும் ஊழியா்கள் வியாழக்கிழமை கூத்தப்பாக்கம் சக்தி நகா், பங்காருராஜா நகா், விஜயலட்சுமி நகா், வானதி நகா், பாா்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, 10 வீடுகளில் குடிநீா்க் குழாய்களில் மின் மோட்டாா் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 10 மின் மோட்டாா்களையும் பறிமுதல் செய்தனா் (படம்).

முழு கட்டுரையைப் படிக்க →