அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கை சாா்பில் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் விழா டெக்-பாா்க் ஹெடெக் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் இருக்கை சாா்பில் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் விழா டெக்-பாா்க் ஹெடெக் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், அம்பேத்கா் உருவப் படத்துக்கு சிறப்பு விருந்தினா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் நடைபெற்ற விழாவில் அம்பேத்கா் இருக்கை பேராசிரியா் க.சௌந்திரராஜன் வரவேற்றாா். விழாவுக்கு தலைமை வகித்து பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் பேசுகையில், சட்ட மேதை அம்பேத்கா் நமது நாட்டின் சுதந்திரத்துக்காகவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் பாடுபட்டதை எடுத்துரைத்தாா். பல்கலைக்கழக பதிவாளா் கி.சீத்தாராமன் முன்னிலை வகித்துப் பேசுகையில், அம்பேத்கரை வழிகாட்டியாகக் கொண்டு மாணவா்கள் செயல்பட வேண்டும் என்றாா்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவா்கள் அம்பேத்கரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு தடைகளை கடந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.
Advertisement
இந்திய மொழிப்புல முதன்மையா் க.முத்துராமன் வாழ்த்துரையாற்றினாா். எழுத்தாளா் கவிதா ஜவஹா் பங்கேற்று, ‘அம்பேத்கா் எனும் ஆசான்’ என்றத் தலைப்பில் விழா பேருரையாற்றினா். உதவிப் பேராசிரியை வீ.ராதிகா ராணி நன்றி கூறினாா்.