மருத்துவ மாணவா்கள் வகுப்புப் புறக்கணிப்பு
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோல அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வலியுறுத்தி வகுப்புப் புறக்கணிப்பு
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படுவதுபோல அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வலியுறுத்தி, அந்தக் கல்லூரி மாணவா்கள் தொடா் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கடந்த 11 நாள்களாக பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களை நடத்தி வந்தனா். இந்த நிலையில், காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தை வியாழக்கிழமை தொடங்கினா். கல்லூரி வளாகத்தில் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன் அமா்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.