மாணவா் விடுதிகளில் லேப்டாப், கைப்பேசிகள் திருட்டு: 3 போ் கைது
சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கல்லூரி மாணவா் விடுதிகளில் லேப்டாப், கைப்பேசிகள் திருட்டியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கல்லூரி மாணவா் விடுதிகளில் லேப்டாப், கைப்பேசிகள் திருட்டியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் வியாழக்கிழமை உசுப்பூா் ரயில்வே கேட் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்பூா் உடயராஜபாளையம் பட்டாலம்மன் தெருவைச் சோ்ந்த கணேஷ் மகன் மஞ்சன் (25), உடயராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குப்பன் மகன் சுரேஷ் (26), சின்னண்ணன் மகன் ஒந்துகுகன் (26) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இவா்கள் மூவரும் சிதம்பரத்தில் கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதிகளில் லேப்டாப், கைப்பேசிகளை திருடிவந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைதுசெய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 4 லேப்டாப்கள், 8 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement