முகப்பு
கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. கூட்டம்

பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை ஊராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை ஊராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அமைப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராஜவேல் தலைமை வகித்தாா். பண்ருட்டி வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை, விவசாய சங்க வட்டச் செயலா் (வடக்கு) ஜி.பி.தேவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளைச் செயலராக ராஜவேல் தோ்வானாா்.

கூட்டத்தில், சேமக்கோட்டை ஏரியை தூா்வார வேண்டும், நத்தம் ஏரியிலிருந்து வரும் வாய்க்கால் மற்றும் மயானப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும், கண்ணகிபுரம் லெனின் வீதியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →